வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்டு 2019)

[01]
சத்தியவசனத்தார் குழுவினர் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். நான் 1977 லிருந்து சத்தியவசன வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுவருகிறேன். அப்பொழுது வானொலி, இப்போது டிவி. குறிப்பாக 1984 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் வழங்கிய நோவா பேழை குறித்த செய்தியை கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. அவர் உடல் ஆரோக்கியம் தேவ சேவையை ஆண்டவர் இன்னும் ஆசீர்வதிக்கவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mr.Marimuthu, Thamdaram pet.


[02]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, வேதாகம அட்டவணைப்படி 2018ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். தின தியான புத்தகம் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசனம் இருமாத இதழ் வரலாற்று செய்திகளுடனான ஆழ்ந்த திருமறை விளக்கங்களுடன் வரும் கட்டுரைகள் மிக்க நன்று. வாட்ஸ் அப் செய்திகள் மற்றைய நண்பர்களுக்கும் அனுப்ப பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. கட்டுரை, தியானங்கள் எழுதுகிறவர்கள், மொழியாக்கம் செய்கிறவர்கள், வானொலி, தொலைகாட்சியில் செய்தி கொடுக்கிறவர்கள் மற்றும் அனைத்து பணிகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.

Mr.Stephen Natarajan, Cuddalore.


[03]
அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வேத வாசிப்பு கால அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு ஆண்டிற்குள் வாசித்து முடிக்க தேவன் கிருபை புரிந்தார். தியானபகுதி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.

Dr.Y.Lydia Rajasekar, Kuzhithurai.


[04]
Greetings to you in the Matchless name of our Lord Saviour Jesus Christ, We watch your TV Programme which is very useful for us. Please broadcost Dr.Theodore Williams speechs. As a family we are remembering you, your family and your Ministries for the Lord in our Prayers. We hope that the Lord is using you in His vineyard for the expansion of His kingdom.

Mr.V.Soma Sundaram, Chennai.


[05]
அன்பு சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் மிகவும் பயனுள்ளது. எனக்கும் குடும்பத்திற்கும் அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசன பத்திரிக்கை ஊழியத்தையும் இதர ஊழியங்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Mr.Sugumaran, Erode.


[06]
கர்த்தருக்குள் அன்பான ஊழியர்களுக்கு, எனக்கு மாதந்தோறும் பத்திரிக்கை ஒழுங்காக கிடைக்கிறது. கடந்த வருடமும் நான் அட்டவணைப்படி வேதாகமம் முழுவதையும் வாசித்து முடித்தேன். எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs. Sarojini Moses, Dohnavur.