வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர் – அக்டோபர் 2020)
[01]
உங்கள் ஊழியங்கள் அநேகருக்கு பிரயோஜனமாக இருப்பதை அன்பர்கள் கடிதம் மூலம் அறியமுடிகின்றது. தேவன்தாமே உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். தங்கள் ஊழியர்களின் அன்பை சென்ற வருடம் சென்னையில் நடந்த கூடுகைகளில் நேரில் அனுபவித்தவன் நான் 81 வயதிலும் தேவன் எனக்கு போதுமானவராகவே இருக்கிறார்.
Mr.Richard Sam Alex, Chennai.
[02]
Praise the Lord, Anudhinamum Christhuvudan Meditation words by Sis.Shanthi Ponnu is encouraging us through small examples to our mind. God bless you all.
Mrs.Kamala Robert, Coimbatore.
[03]
தாங்கள் மேற்கொண்டிருக்கும் உன்னதப் பணிகளான இலக்கியப்பணி, அனுதினமும் கிறிஸ்துவுடனான தியானப்பணி, வானொலி மற்றும் தொலைக்காட்சி பணிகள் மூலமாக விதைக்கப்படும், திருவசனங்கள் நிச்சயமாக அதனதின் பணிகளைச் செய்து மீட்பர் இயேசுவுக்குள் அனைவரையுங்கூட்டிச் சேர்க்கும் என்று விசுவாசிக்கிறேன். கொரானா காலத்திலும் ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை அனுப்பியதற்கு உங்களுக்கு நன்றி. இறைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் சுகம் பெலன் அளித்துக் காப்பாராக.
Mr.G.Dhanaraj, Coimbatore.
[04]
Praise the Lord, சத்தியவசன வானொலி பணி வழங்கும் திங்கள், செவ்வாய் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்கிறேன், தற்போது எடிசன் அவர்கள் இயேசுவின் மலை பிரசங்கத்தை தொடர்ந்து பேசிவருகிறார். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது, நன்றி. நிகழ்ச்சியை நடத்துபவரின் குரல் வலம் மிக அருமை, அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள் மேலும் சாம் கமலேசன், பிரகாஷ் ஏசுவடியான், தியோடர் வில்லியம்ஸ், டாக்டர் புஷ்பராஜ் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளது சத்தியவசன ஊழியங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
Mr.J.A.Judson, Salem.
[05]
Beloved brother in Christ, Greetings in Jesus NAME. Your Magazine Anuthinamum Christhuvudan is of very much useful to our Spiritual Life. Every day in the Morning, before We start our day’s Work, We read the Word for that day and We meditate on that. We as a family are remembering you all.Your loving family and also your wonderful ministry in our daily Prayers.
Mr.S.Mathews, Vellore.
[06]
தங்கள் வலைத்தளத்தில் உள்ள இன்றைய தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Bro.Jebaraj, Aruppukottai