ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 24 செவ்வாய்

இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) என ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து பழங்குடி, மலைவாழ் மக்கள் மத்தியில் ஊழியத்திற்கு சென்றுள்ள மிஷனெரிகளுக்காகவும், மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும் ஜெபிப்போம். தங்கள் ஜெபத்தாலும் ஆதரவாலும் தாங்கும் விசுவாச குடும்பங்களையும் கர்த்தர் தழைக்கச் செய்திட மன்றாடுவோம்.