ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 18 வியாழன்

மிகவும் கடைசிகாலத்தில் இருக்கிற நாம் பிசாசின் தந்திரங்களினாலே சர்ச்சைகள், பிளவுகள், வாக்குவாதங்களோடு சமாதானமின்றி இருக்கும் கிறிஸ்தவ குடும்பங்களுக்காக, பங்காளர் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட (கொலோ.2:2) குடும்பத்தினரின் உறவுகள் பாதுகாக்கப்பட மன்றாடுவோம்.