ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 9 வெள்ளி

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? (எசேக். 18:23) எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றும், பாவத்திலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டுமென்று நீடிய பொறுமையோடும் மனதுருக்கத்தோடும் இருக்கிற தேவனின் அன்பை ஒவ்வொருவரும் அறிந்து உணர்ந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.