ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 23 திங்கள்
நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்(1தீமோத்.6:17)தாமே தொழில் செய்கிற ஒவ்வொருவரும் இவ்வருடத்திலே நல்ல வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் காண கிருபைச்செய்து, கடன் பிரச்சனையோடு உள்ளவர்கள் முழுத்தொகையையும் கொடுத்து சமாதானமான வாழ்வைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவிச்செய்ய பாரத்துடன் ஜெபிப்போம்.