ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 1 வியாழன்

நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் (தானியேல் 9:18).

நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா.44:21) நம்மை மறவாத நேசர் இந்த ஜுன் மாதத்தை நன்மையின் மாதமாகவும் சுகத்தின் மாதமாகவும் ஆசீர்வதித்து, இம்மாதத்தில் நாம் சந்திக்க உள்ள எல்லாத் தேவைகளிலும் கர்த்தர் கூட இருந்து மனநிறைவாய் நடத்திச் செல்ல நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.