ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 1 செவ்வாய்
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோவான் 5:14).
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்கி.4:2) இம்மாதமும் கர்த்தர் தமது கூடாரமறைவில் நம்மை ஒளித்து பாதுகாத்து நடத்துவதற்கும் எந்தச் சமயத்திலும் நாம் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.