ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 12 வெள்ளி
விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? (ஏசா.50:2) குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு அதிலிருந்து விடுதலை அடையமுடியாமல் உள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் இரட்சிக்கப்படுவதற்கும், அவர்களை மீட்க கர்த்தரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு என்று குடும்பத்தார் விசுவாசித்து அற்புத விடுதலையை பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.