ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 5 வெள்ளி
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து … உயர்த்துவார் (சங்.27:5) பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள கர்ப்ப ஸ்திரீகளுக்கு கர்த்தர் சுகப்பிரசவத்தைத் தந்தருளவும் தாய்-சேய் இருவரையும் தமது கூடாரமறைவில் மறைத்து பாதுகாத்து நடத்த ஜெபம் செய்வோம்.