ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 10 புதன்
இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:20) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாள் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையை ஆசீர்வதித்து, ஜெபக்கூட்டத்திலே வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் செய்கிற தம்முடைய வல்லமையின்படியே கிரியை செய்தருள ஜெபிப்போம்.