ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 18 ஞாயிறு

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபேசி.4:3) இந்தநாளிலும் ஒவ்வொரு திருச்சபைகளின் ஐக்கியத்திற்காகவும், தாழ்மை, மன்னிக்கும் சிந்தைகளினால் சபை நிரப்பப்படவும், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக கபடமில்லாத இருதயத்தோடே கர்த்தரை ஆராதித்து ஊழியம் செய்ய அர்ப்பணித்து ஜெபிப்போம்.