ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 21 புதன்

உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் (யாத்.33:12) என்ற வாக்குப்படியே தேவன் தாமே தெரிந்துகொண்ட சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அவர்களை தமது பெலத்தால் இடைகட்டி, நல்ல சுகபெலத்தோடு கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு உதவி செய்யவும், தேவைகளை நிறைவாய் சந்திக்கவும் ஜெபிப்போம்.