ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 15 ஞாயிறு
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபி.12:14) இந்தநாளின் ஆராதனைக்கு வரும் விசுவாசிகள் ஜெபத்தோடு பங்குபெற்று கர்த்தரைத் தொழுதுகொள்ளவும், போதகர்கள், பாடகர்குழுவினர், இசை வாசிக்கிறவர்கள் யாவரும் நல்ல ஆயத்தத்தோடும் ஜெபத்தோடும் ஆராதனையில் தேவனை மகிமைப்படுத்திட வேண்டுதல் செய்வோம்.