ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 1 செவ்வாய்
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் (கலாத்தியர் 4:6).
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (சங்.146:5) இப்புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதித்து தரவும், காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணி, கர்த்தரே நமக்குத் துணையாக, நம்பிக்கையாக இருந்து வழிநடத்த நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.