ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 4 திங்கள்

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம் (சங்.119:160) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பப்படவும், வசனங்களை கேட்கும்படி மக்களுடைய இருதயம் திருப்பப்படவும், தொலைக்காட்சி ஊழியங்களுக்கான எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.