ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 1 ஞாயிறு

கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக (சங்கீதம் 130:1,2).

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக (சங்.70:4) இப்புதிய மாதத்தின் முதல் நாளிலே தேவனைத் தொழுதுகொள்ள கர்த்தர் தந்த ஆராதனை நாளுக்காக நன்றி செலுத்தி, இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம்பிடித்து நடத்தவும், வேண்டிய ஒத்தாசையையும் நன்மையையும் பரத்திலிருந்து கட்டளையிட ஜெபிப்போம்.