ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 11 சனி
கர்த்தர் … என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார் (சங்.18:24) பங்காளர் குடும்பங்களில் தொழில் செய்துவரும் அனைவரையும் தேவாதிதேவன் ஆசீர்வதித்து இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகத் தக்கதாக அவர்களது கைகளின் பலனை பெருகச்செய்யவும் அநேகருக்கு ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாய் தேவன் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.