ஜெபக்குறிப்பு: 2025 மே 25 ஞாயிறு

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும் (ஏசா.40:5) அகில உலகமெங்கும் நடைபெறும் ஆராதனைகளில் தேவமகிமை வெளிப்படவும், பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்தும் பரிசுத்தஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிற எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு சபை வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம்.