ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 1 செவ்வாய்
தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே உமக்கு நிகரானவர் யார்? (சங். 71:19).
வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12) என்ற வாக்குப்படியே கர்த்தர் நம்மேல் நோக்கமாயிருந்து நமது கால் வழுவாதபடி நடத்திவந்தார். கர்த்தரை ஸ்தோத்திரித்து புதிய மாதத்தின் நன்மைக்காய் தேவநடத்துதலுக்காய் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.