ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 1 வெள்ளி

என் தேவனாகிய கர்த்தாவே … இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற … ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக (1இரா.8:30).

கர்த்தாவே உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும் (சங்.25:6) இம்மாதம் முழுவதும் அவருடைய காருண்யம் நம்மை சூழ்ந்துகொள்ளவும், நமது நடைகளை கர்த்தர் காவல்படுத்தி செம்மையான வழியில் நடத்திச் செல்லும்படியாக கர்த்தருடைய கரத்தில் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.