ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 12 வியாழன்
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார் (சங்.46:9) கர்த்தர்தாமே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளை கண்ணோக்கி யுத்தங்களை ஓயப்பண்ணும்படியான கட்டளையைப் பிறப்பிக்கவும் கர்த்தருடைய ஆளுகை அங்கே காணப்படவும், நம்பிக்கையற்ற நிலையில் உள்ள மக்களது எதிர்காலத்திற்காகவும் கருத்தாய் ஜெபிப்போம்.