ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 26 வியாழன்

தேசமெங்கும் போக்குவரவு வசதியில்லாத எல்லா கிராமங்களிலும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவும், சுகாதாரப் பிரிவின் அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதாரப்பணியில் ஈடுபடும் துப்புரவு செய்யும் ஊழியர்கள் யாவரும் நல்ல ஆரோக்கியத்தோடு காணப்படவும், மருத்துவத்துறை சிறப்பாய் செயல்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.