ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 30 வியாழன்

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே இம்மாதம் முழுவதும் தமது நேசகரத்தில் ஏந்தி குறைவுகளை நிறைவாக்கி நடத்திவந்தார். அவருடைய கிருபையை மகிழ்ச்சியோடு போற்றி நன்றி செலுத்தி ஆராதிப்போம்.

இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச. 5: 2,6)