ஜெபக்குறிப்பு: 2026 மே 1 வெள்ளி

எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. நீர் ஒருவரே கர்த்தர் (நெகேமியா 9:5,6).

கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் இரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை (1சாமு.14:6) என்ற வாக்குப்படியே இமாதத்திலும் கர்த்தர் நம் துணையாயிருந்து வேண்டிய எல்லா உதவி ஒத்தாசைகளையும் பரத்திலிருந்து தந்தருளி குறைவில்லாமல் நடத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.