ஜெபக்குறிப்பு: 2026 மே 26 செவ்வாய்
சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி உனக்குக் கட்டளையிடுவாராக (1சாமு.1:17) கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டு நிந்தை நீங்கப்பெற்ற அன்னாளைப் போல குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் கர்த்தர் வாக்குப் பண்ணினபடியே குழந்தைச் செல்வத்தை அருளிச்செய்ய ஜெபிப்போம்.