சத்திய வசனம் பங்காளர் மடல்

(மார்ச் – ஏப்ரல் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இம்மாத சத்தியவசன சஞ்சிகையின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். சத்தியவசன ஊழியத்தை மிகுந்த உதாரத்துவமாய் ஜெபத்துடனே தாங்கி வருகிறீர்கள். கடந்த நாட்களில் சுயவெறுப்பு காணிக்கைகளை அனுப்பியும் தொலைக்காட்சி ஊழியத்தை ஆதரித்த அனைத்து பங்காளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் (நீதி.11:25).

பங்காளர் குடும்பங்களிலே இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் எல்லா பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துள்ளோம். பிள்ளைகளது உயர்கல்விகளையும் அவர்களது படிப்புக்கான எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார்.

சத்தியவசன வெளியீடுகள் மூலமாகவும், தொலைக்காட்சி ஊழியங்கள், வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் YouTube வாயிலாகவும் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு புதிய நேயர்கள் பங்குபெறுவதற்கும் உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

மார்ச் மாதம் முதல் வருடாந்திர பங்காளர் காணிக்கையை ரூ.600/- லிருந்து ரூ.1000/- ஆக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறோம். பத்திரிக்கையை அச்சிடும் கூலி, பேப்பர் மற்றும் அதிகரித்துள்ள தபால் செலவு ஆகிய காரணங்களினிமித்தம் இந்த உயர்வை செய்யவேண்டியுள்ளது. பங்காளர்கள் இதைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்விதழில் நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரையும், தனிமை உணர்வினால் ஏற்படும் விளைவுகளையும், அதனைப்போக்க நாம் கைக்கொள்ள வேண்டிய காரியங்களைக் குறித்து தனிமை என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு வேதபாடமாக சிறிய தீர்க்கதரிசிகளைக் குறித்து இம்மாதத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். அருள்திரு இராபர்ட் ரீட் அவர்கள் எழுதிய யோவேல் தீர்க்கதரிசியைக் குறித்த வேதபாடமும், தேவ வார்த்தையைக் கேட்கையில் கவனமாயிருங்கள் என்ற தலைப்பில் Dr.M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேத பாடமும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.

A.ஜான் துரை

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது (ரோமர் 1:16)