ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 1 திங்கள்
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (லூக்கா 11:9).
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய் (ஏசா.62:3) புதிய மாதத்தையும். புதிய நாளையும் தந்த நேசகர்த்தாவை ஸ்தோத்திரிப்போம். கர்த்தரையே நம்பிக்கையாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் கர்த்தரை நமக்கு முன்பாக நிறுத்தி பொறுமையோடு ஓட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.