ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 25 வியாழன்
மனுஷர் யாவரும் … தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அனுக்கிரகம் (பிரச.3:13) தொழில் செய்துவரும் பங்காளர் குடும்பத்தில் அவர்களது பிரயாசங்களை கர்த்தர் வாய்க்கச்செய்து தொழில் வளர்ச்சிபெறவும், தொழில் நஷ்டமடைந்து கடன்பட்டுள்ளோர் அவற்றிலிருந்து மீண்டுவருவதற்கான கிருபைகளைப் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.