ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 14 வெள்ளி

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் (மத்.24:14) உலக மக்கள்தொகையில் 70 சதவீத மக்கள் தொகையினர் இதுவரை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாகவோ, அல்லது எந்தவொரு திருச்சபையோ, விசுவாசியோ இல்லாத சமூகங்களைச் சார்ந்தவர்களாவோ இருக்கிறார்கள். அனைவருக்கும் சுவிசேஷம் சென்றடைய ஜெபிப்போம்.