ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 31 சனி

கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார் (1சாமு.12:22) மகத்துவமான தேவன் பத்துமாதங்களை நாம் காணும்படி கிருபை செய்தார். கர்த்தர் செய்த நன்மைகளை, அதிசயமான செயல்களை எண்ணி எண்ணி முழுஇருதயத்தோடும் முழுபெலத்தோடும் நன்றி சொல்லி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.