ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 10 செவ்வாய்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் கடல்சார் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு போதிய மழை மற்றும் நல்ல விளைச்சல், குடிநீர்வசதி, சுகாதாரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மேம்படவும் ஜெபிப்போம். முதியோர்கள், மாணவர்களின் ஆன்மீக சமூக, மற்றும் பொருளாதார நலனுக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.