ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 15 ஞாயிறு
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.100:1) அகில உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காகவும். திருச்சபை வளர்ச்சி பணிகளுக்காகவும், துதி ஆராதனைகளை நடத்த முடியாதவாறு தடைபண்ணுகிற எல்லா வல்லமைகளும் அழிக்கப்பட்டு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் உற்சாகமாய் ஆராதனைக்கு கடந்து செல்லவும் நாம் கருத்துடன் ஜெபிப்போம்.