வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2019)
[01]
தாங்கள் மாதந்தோறும் அனுப்பும் சத்தியவசன பத்திரிக்கைகள் எனக்கு தவறாமல் கிடைக்கின்றன. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்திலுள்ள அட்டவணைப்படி இவ்வாண்டும் வேதத்தை அனுதினமும் வாசித்து வருகிறேன். எங்களுக்காக ஜெபியுங்கள்.
Mrs.Sarojini Moses, Dohnavur.
[02]
Dear Brother in Christ, I am immesnely delighted to meditate on the Biblical verses given in ‘Anuthinamum Christhuvudan’. The authors of the morning devotion have been inspired by the Holy Spirit and so we reap spiritual growth and maturity . I am very much grateful to the Lord and your Ministry in Christ because you have dedicated yourself for the service of the Lord Jesus. Your publication ‘Sathiyavasanam’ abounds with deep and penetrating spiritual wisdom. This spiritual Magazine is also useful for strengthening and renewing my spiritual life. I regularly pray for your Ministry.
Mr.P.Vincent, Srivilliputhur.
[03]
சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய மாதப் பத்திரிக்கையை தொடர்ந்து பெற்றுவருகிறோம். தியானபுத்தகம் தின தியான வாசிப்பிற்கு மிகப் பிரயோஜனமாக உள்ளது.
Mrs.Jebamani George, Tirunelveli.
[04]
சத்தியவசன புத்தகங்கள் ஒழுங்காக கிடைக்கிறது. புத்தகங்கள் அனைத்தும் எங்களது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் சத்தியவசன ஊழியங்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக!
Mrs.Regina Manickam, Palayamkottai.
[05]
சத்தியவசன புத்தகங்கள் எனக்கு தவறாமல் கிடைக்கிறது. தினமும் வேதப் பகுதி வாசிப்பதற்கு முன்பதாக, அனுதினமும் கிறிஸ்துவுடன் அன்றையப் பகுதியைத் தவறாது வாசிப்பவர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு பகுதியும் ஆழ்ந்த கருத்துடன் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பொருத்தமான உதாரணத்துடன் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான ஜெபம் வழிகாட்டியாக உள்ளது. தேவனுடைய ராஜ்யம் புத்தகமும் கிடைத்தது. தங்கள் பத்திரிக்கை ஊழியங்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Mr.R.S.A.Sundersing, Tirunelveli.
[06]
Dear Brother in Christ, I am receiving your Magazine regularly and I am reading Anuthinamum Christhuvudan daily. May God bless your Ministry.
Mrs.Dr.Smilee Vivian, Davangere.