ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 1 செவ்வாய்

உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறு உத்தரவு அருளுவார் (ஏசா.30:19).


அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் (உபா. 33:27). இப்புதிய மாதத்தின் தேவன் நமக்கு அடைக்கலமும் ஆதாரமுமாக இருக்கும் படியாகவும் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்திக்கும்படியாகவும், புதிய வழிகளை திறக்கும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.