ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 15 ஞாயிறு
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்.2:10) கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வுகள் சபைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நாட்களில் சிறுவர் ஊழியங்களின் மூலம் ஆண்டவரை அறியாத அநேக பிள்ளைகள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளினாலே தொடப்படவும், ஆத்தும பாரத்தோடு சிறுவர் ஊழியங்களைச் செய்யும் ஊழியர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.