ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 10 ஞாயிறு

உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? (சங். 113:5) எல்லா திருச்சபை ஆராதனைகளுக்காகவும் ஜெபிப்போம். சகல ஜனங்களுக்கும் ஜெபவீடாகிய கர்த்தருடைய ஆலயத்தில் ஏறெடுக்கப்படும் மன்றாட்டு ஜெபங்களுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பலவீனங்களோடும் வியாதிகளோடும் பங்குபெற்றவர்கள் சொஸ்தமடைந்தவர்களாய் திரும்பிச்செல்ல ஜெபிப்போம்.