ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 4 ஞாயிறு

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள் (சங்.33:3) உலகெங்கும் நடைபெறும் எல்லா சபை ஆராதனைகளிலும் பரிசுத்தமுள்ள தேவனின் நாமம் உயர்த்தப்படுவதற்கும், ஆராதனைகளுக்கு மற்றும் விசேஷித்த கூட்டங்களுக்கு அரசாங்க கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் போதகர்கள் விசுவாசிகளுக்காக ஜெபிப்போம்.