ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 18 புதன்

நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தை திறப்பார் (உபா.28:12) என்ற வாக்கு தொழில் செய்து வரும் பங்காளர் குடும்பங்களில் நிறைவேறவும், தொழிலில் காணப்பட்ட தொய்வுகள் தோல்விகள் எல்லாம் சரிக்கட்டப்படவும், கடன் வாங்காதிருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.