ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 1 புதன்
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் (எரேமி. 17:10).
நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை தப்புவிப்பார் (தானியேல் 6:16) இந்தப் புதிய மாதத்திற்காகவும். பரிசுத்த வாரத்திற்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். இந்த மாதம் கிறிஸ்துவை அதிகமாய் கிட்டிச்சேரும் நாட்களாக இருப்பதற்கும், கர்த்தரின் வல்லமை நம்மேல் தங்கும்படியும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.