ஆலோசகர்

தியானம்: 2026 மே 15 வெள்ளி | வேத வாசிப்பு: தீத்து 2:1-5

YouTube video

நீ … புறப்பட்டு அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான் (யாத்.17:9).

நம்பிக்கையுள்ள ஒரு ஆலோசகர் அல்லது வழிகாட்டி என்பவர் நமக்கு ஆலோசனை கூறி நம்முடனே கூட வருபவராகவே இருப்பார். அதற்காக அவர் நம்மைக் கட்டுப்படுத்துபவர் அல்ல. அவர் ஞானமும் அறிவுமுள்ளவர். நம் முடைய வாழ்க்கையில் உதவி தேவைப்படும் நேரங்களில் ஆலோசனை கூறி, வாழ்வின் பள்ளங்களிலும் தடைகளிலும் நம்மை நல்வழிப்படுத்தும் ஆசானாக, வழிநடத்தும் தலைவராக இருப்பவரே நல்ல ஆலோசகராவார். ஆலோசனை தருதல் என்பது இன்று அநேக கிறிஸ்தவர்களுக்கு ஒரு புதிய காரியமாக தோன் றலாம். ஆனால் அது ஒரு பழமையான வேத பாரம்பரியத்தையுடையது. இளை ஞனான யோசுவாவுக்கு முதியவரான மோசே ஆலோசனையாளராக இருந்தார். இஸ்ரவேலரை நடத்தும் அடுத்த தலைவனாக பொறுப்பெடுக்கும் வரைக்கும் இந்த இளைஞனுக்கு அவர் ஆலோசனை கூறி எல்லாக் காரியங்களிலும் பயிற்சி கொடுத்தார்.
இன்று திருச்சபையில் முதியவர்களின் ஆலோசனைக்குச் செவிகொடுத்து நடக்கவேண்டியது மிகவும் அவசியம். தனது குமாரர்கள் என்று தீமோத்தேயு வையும் தீத்துவையும் அழைத்து அவர்களுக்கு நல்வழிகளைப் போதித்து வழிநடத்தினார் பவுல். (1தீமோ.1:2,18; 2தீமோ.2:1 தீத்து 1:4,2:3-5). திருச் சபையின் மூத்த பெண்களுக்கும் சிறந்த ஆலோசனையாளராக அவர் விளங் கினார். “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்திற்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப் படாதவர்களுமாயிருக்கவும், தேவ வசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ள வர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களு மாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக் கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு” என்று கட்டளையிடுகிறார் பவுல். நீங்கள் விசுவாசத்தில் முதிர்ந்தவராயிருந்தால் ஒரு இளையவருக்கு உங்கள் அனுபவத்தைச் சொல்லிக்கொடுத்து அவர் கிறிஸ்துவுக்குள் வளரச்செய்யுங்கள். நீங்கள் விசுவாசத்தில் புதியவராக இருந்தால், கிறிஸ்துவுடன் அன்றாட உறவு வைத்திருப்பதை தனது செயல்களில் வெளிப்படுத்தும் ஒருவரைக் கண்டு அவரது ஆலோசனையைக் கேட்டு நடவுங்கள். இதுவே தலைமைப் பயிற்சியில் தேவனுடைய திட்டம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒருவருக்கு ஆலோசனை கொடுப்பவராகவோ அல்லது ஒருவரிடமிருந்து ஆலோசனை பெறுபவராகவோ இருத்தல் அவசியம். மற்றவர்களுக்கு உதவும்போது நாம் நமக்கே உதவுகிறோம்.
ஜெபம்: அன்பின் தகப்பனே, ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசத்தில் முதிர்ந்தவர் களிடத்தில் ஆலோசனைப் பெற்று நற்கிரியைகளில் வளர எங்களுக்குதவும். ஆமென்.