ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 5 வெள்ளி

உங்களில் ஒருவனும் … பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம் (எபி.4:1) பங்காளர் குடும்பங்களில் ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட நபர்கள் ஆராதனையில் தவறாது பங்கு பெறவும், கர்த்தரை அறிகிற அறிவில் வளர்ந்து வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருக்க ஆவியானவர் பெலப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.