ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 28 செவ்வாய்
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்: அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் (சங்.10:17) கைவிடப்பட்ட, ஆதரவற்ற சிறுவர் சிறுமிகளுக்கான இல்லங்களில், அவர்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படவும், மருத்துவ பராமரிப்போடு கூடிய அன்பும் ஆதரவும், அவர்களுக்கான கல்வி கிடைக்கப்பெறுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.