ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 2 ஞாயிறு
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன் (சங்.43:4) மாதத்தின் முதல் ஆராதனைநாளில் உலகமெங்குமுள்ள திருச்சபைகளின் விசுவாச குடும்பத்தார் சிறியோர் பெரியோர் அனைவரும் ஆராதனையில் தவறாது பங்குபெறவும், சிறுவர், வாலிபர்களுக்கான ஊழியங்களில் ஆவிக்குரிய எழுச்சி ஏற்படவும் ஜெபிப்போம்.