ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 18 செவ்வாய்
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கான பள்ளிகள், இல்லங்கள், பயிற்சிமையங்களில் சேர்த்து, கல்வி மற்றும் பயிற்சிகளை எவ்வித கட்டணமுமின்றி பராமரித்துவரும் ஸ்தபானங்களுக்காகவும், நிர்வா கஸ்தர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், சுகாதாரபணியாளர்கள் போன்ற அனைவருக்காகவும், அவர்களது தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.