ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 5 சனி
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு செவிகொடுத்தார் (சங்.120:1) என்ற வாக்குப்படியே பிரசவத்திற்கு காத்திருக்கும் கர்ப்பஸ்திரீகள் வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் தரித்திருந்து சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கவும், சங்கீதக்காரனோடு சேர்ந்து கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார் என்று கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக மன்றாடுவோம்.