ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 1 வியாழன்

நீங்கள சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மாற்கு 14:38).

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன் (1பேதுரு 5:10) தாமே இப்புதிய மாதத்தில் நம்மோடிருந்து நம்மை நடத்தவும், நாமும் அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடந்து, கனிகொடுக்கிறவர்களாய் வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.