ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 30 வெள்ளி

மேற்கு பசிபிக்பெருங்கடலின் தீவுநாடாகிய பிலிப்பைன்ஸ் உலகஅளவில் அதிக மிஷனரிகளை அனுப்பும் நாடாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சபைகளுக்குள் ஒருமைப்பாடு, சமாதானம் பெருகவும், சத்தியத்தில் உறுதியாய் நிற்கவும், வாலிபப்பிள்ளைகள் நல்வழியில் நடத்தப்பட, அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.