ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 திங்கள்
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (1பேது.3:12) என்ற வாக்கைப்போல இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மேல் தம் கண்ணை வைத்து ஆலோசனை தந்து நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்தும்படியாக அவருடைய கரத்தில் அர்ப்பணித்து ஜெபிப்போம்.