ஜெபக்குறிப்பு: மார்ச் 16 திங்கள்

“உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது” (சங்.89:13) வல்லமையுள்ள தேவன்தாமே ஈரோட்டில் சத்தியவசன பிரதிநிதியாக பணியாற்றும் சகோ.சாம் ஜெயசிங், மதுரையில் பணியாற்றும் சகோதரி சுகுணா இவர்களோடிருந்து ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.